விவசாய கலந்துரையாடல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நிறைமதி கிராமத்தில் விவசாய கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேலாண்மை மற்றும் உழவர் நலத்துறை, விவசாயிகள் விஞ்ஞானிகள் ஆகியோர் உரையாடினார். இந்த நிகழ்ச்சிக்கு வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி தலைமை தாங்கினார்.
இவர்கள் வேளாண்மை திட்டங்கள் மற்றும் கால்நடை திட்டங்கள் குறித்து பேசினார்கள். இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குனர் சுந்தரம், உதவி இயக்குனர் நடராஜன், டாக்டர் பெரியசாமி, வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் சர்மிளா, வாழவச்சனூர் வேளாண்மை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள் அருண், ஏஞ்சல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.