கால்நடை மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமிற்கு சின்னசேலம் ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். இந்த மருத்துவ முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதைத்தொடர்ந்து நோயுற்ற மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் சினை பரிசோதனை, வயிற்று புழு நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், உள்ளிட்ட பல சோதனைகள் செய்யப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணி, கால்நடை உதவி மருத்துவர் முருகேசன், ஆவின் கால்நடை மருத்துவர் கார்த்திகா, கால்நடை உதவியாளர் ஜெயராமன், உமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.