மோட்டார் சைக்கிள் திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருமால்பாடி கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். இதனை மர்ம நபர் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை திருடியவரை தேடி வந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் குண்ணகம்பூண்டி கிராமத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் காவல்துறையினரை கண்டதும் தப்பி செல்ல முயன்றுள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர் வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்த போது அவர் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பென்னகர்நகர் கிராமத்தில் வசிக்கும் ஹரி என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போன குமாரின் மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஹரியை கைது செய்ததோடு அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து ஹரி வடவணக்கம்பாடி, மகமாய்திருமணி ஆகிய ஊர்களில் 3 மோட்டார் சைக்கிள்களை திருடியதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.