மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேராவூரணி பகுதியில் நீலகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பழைய பேராவூரணி பகுதியில் மோட்டார் சைக்கிளில் நீலகண்டன் வந்து கொண்டிருந்தார். அப்போது வேகத்தடையில் நீலகண்டனின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நீலகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீலகண்டனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.