Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வெளியே சென்ற நண்பர்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் வலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையத்தில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்துரு என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சந்துரு தனது நண்பரான ராஜ் உள்பட 4 பேருடன் 3 மோட்டார் சைக்கிள்களில் கன்னியாகுமரி நோக்கி சென்றுள்ளார். இதில் ஒரு மோட்டார் சைக்கிளில் ராஜ் ஓட்டி சென்ற நிலையில் சந்துரு பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். இந்நிலையில் விருதுநகர் கவுசிகா நதி பாலத்தில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது.

இதில் படுகாயமடைந்த சந்துருவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சந்துரு பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து பாபு அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |