தேசிய பென்ஷன் திட்டம் NPS-ல் சேரும் பயனாளர் ஒருவர் நிரந்தர ஓய்வூதியக் கணக்கு எண்ணைப் (PRAN) பெறுகிறார், அதில் அவரது ஓய்வூதிய பங்களிப்புகள் அனைத்தும் வரவு வைக்கப்படுகிறது. தொழில்நுட்பம் சார்ந்து உள்ளதால் சந்தாதாரர்கள் தங்கள் கணக்குகளை NPS மொபைல் ஆப் வாயிலாக ஆன்லைனில் பார்க்கலாம். NPS-ன் கீழுள்ள ஒரு மத்திய அரசு பயனாளி தன் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் (DA) 10 சதவீதத்தை கட்டாயமாக ஓய்வூதிய பங்களிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
NPS திட்டத்தின் சேருவதற்கு அதிகபட்சம் வயது 70 ஆகவும், 60 வயதிற்கு மேற்பட்ட பயனாளிகள் தொடர்ந்து 75 வயது வரையும் தங்கள் பென்ஷன் கணக்கை நிர்வகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 2 லட்சத்துக்கும் குறைவான ஓய்வூதிய நிதி இருப்பவர்கள் மட்டுமே முழுத் தொகையையும் எடுக்க முடியும் என்ற நிலை நீடித்தது. ஆனால் தற்போது 5 லட்சத்திற்கும் குறைவான ஓய்வூதிய நிதிகளில், முழுப் பணத்தையும் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த பணத்திற்கு அரசின் வரிவிலக்கு வழங்கப்படும் என்பதுதான் இத்திட்டத்தின் சிறப்பம்சமாக இருக்கிறது. தற்போதைய நடப்பு நிதி ஆண்டில் மேலும் 10 லட்சம் பயனாளிகளை திட்டத்தில் இணைக்க PFRDA இலக்கு நிர்ணயித்து உள்ளது. கடந்த 2022 பட்ஜெட் தாக்கலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தேசிய ஓய்வூதிய அமைப்பிற்கான (NPS) பங்களிப்புகளுக்கு வரி விலக்குகளை 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்ததாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.