கர்ப்பிணி மனைவியை தாக்கிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள கொட்டப்பட்டு பகுதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மேனகா தேவி என்ற மனைவி உள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர்கள் காதல் திருமணம் செய்து தனியாக வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மேனகா தேவி இரண்டாவதாக கருவுற்றிருந்தார். இதனை கருத்தில் கொண்டு மேனகா தேவி தனியார் மருத்துவயில் பரிசோதனைகளை மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் கடந்த சில நாட்களாக குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது.
இதில் ஆத்திரமடைந்த ரவிக்குமார் தனது மனைவி மேனகா தேவியே வயிற்றில் எட்டி உதைத்துள்ளார். இதில் மயங்கி விழுந்த மேனகா தேவியை அருகிலிருந்தவர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மேனகா தேவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் வயிற்றில் இருந்த சிசு இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மேனகா தேவி பொன்மலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மனைவியின் வயிற்றில் எட்டி உதைத்து சிசுவை கொன்ற கணவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.