Categories
தேசிய செய்திகள்

வரும் 17 ஆம் தேதி…. இரவு நேர ஊரடங்கு கிடையாது?….. மாநில அரசு அறிவிப்பு…..!!!!

மேற்கு வங்காளத்தின் கொரோனா எண்ணிக்கை கடந்த புதன்கிழமை நிலவரப்படி 20,16,094 ஆக அதிகரித்தது. தற்போது மாநிலத்தில் நோய் தொற்றால் உயிரிழப்பு எண்ணிக்கை 21,182 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார துறையின் அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. இப்போது மாநிலத்தில் 1,560 நபர்கள் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் கடந்த 24 மணி நேரத்தில் 102 பேர் உட்பட இதுவரையிலும் 19,93,352 நபர்கள் நோயில் இருந்து குணடமடைந்துள்ளனர். மாநில நிர்வாகம் இதுவரையிலும் கொரோனாவுக்கு 2.44 கோடி மாதிரிகளை பரிசோதித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்காளத்தில் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன் கீழ் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்நிலையில் “ஹோலிகா தஹன்” நிகழ்ச்சிக்காக ஹோலிக்கு முந்தைய நாளான மார்ச் 17 அன்று மாநிலத்திற்கு இரவு ஊரடங்கு உத்தரவை நீக்குவதாக மேற்கு வங்க அரசு கடந்த வியாழக்கிழமை அறிவித்தது. அதாவது ஹோலி பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மக்கள் மற்றும் வாகனங்கள் செல்வது தொடர்பான கட்டுப்பாடுகள் மார்ச் 17 இரவு தளர்த்தப்படும். இதன் காரணமாக மக்கள் “ஹோலிகா தஹான்’ பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |