Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கட்டாயமாக நதிகள் இணைக்கப்படும்…. நடைபெற்ற கூட்டமைப்பு கூட்டம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

இணைப்பு கால்வாய் நீர் பாசன விவசாயிகள் சார்பில் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் வைத்து காவேரி, வைகை, குண்டாறு இணைப்பு கால்வாய் நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் மாரிமுத்து, பொதுசெயலாளர் அர்ஜுனன், மாநில துணை தலைவர் முருகேசன், பாலகிருஷ்ணன், மாநில நிர்வாகி பாருக் முருகேசன், அய்யனார், முருகன், மலைச்சாமி, கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் பொது செயலாளர் அர்ஜுனன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மத்திய அரசு நடப்பாண்டு பட்ஜெட் தாக்கல் செய்யும்போது கோதாவரி, கிருஷ்ணா, செய்யாறு, காவிரி இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவித்துள்ளது.

மேலும் ஏற்கனவே காவேரி, வைகை, குண்டாறு, இணைப்பு திட்டத்தில் காவிரி உபரி நீரை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதனால் கோதாவரி, கிருஷ்ணா, செய்யாறு காவிரி இணைப்பு திட்டத்தை அறிவித்ததன் மூலம் பின்தங்கிய  மாவட்டங்களான புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களுக்கு இது வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |