தினமும் ஒரு கேரட் ஆவது குழந்தைகளுக்கு கொடுங்க .காய்கறிகளில் சத்து நிறைந்த ஒன்று கேரட் ….
தேவையான பொருட்கள் :
துருவிய கேரட் :1கப்
கருப்பட்டி :3டீஸ்பூன்
இஞ்சிச்சாறு :அரை டீஸ்பூன்
ஏலக்காய் தூள் :சிறிது
பால் :250மி .லி
செய்முறை :
*பாலை நன்றாக கொதிக்க வைத்து ஆற விடவும்.
*துருவிய கேரட்டை நன்கு அரைத்து கொள்ளவும் .அரைத்த கேரட்டை வடிகொட்டி கொள்ளவும் .
*வடிகட்டிய ஜூசில் கருப்பட்டி ,இஞ்சிச்சாறு ,ஏலக்காய் தூள் ,காய்ச்சி ஆறவைத்த பால் இவைகளை கண்ணாடி டம்ளரில் எடுத்து பரிமாறவும் .
*சத்து நிறைந்த சுவையான ருசி மிக்க கருப்பட்டி கேரட் பால் தயார் ……