சாதாரண மனிதர்கள் விண்வெளிக்கு பயணிப்பது மிகவும் கடினமான ஒன்று. அவர்களும் பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த வருடம் விண்ணில் ஏவ உள்ள ஓரியன் விண்கலத்தில் பொதுமக்கள் பதிவு செய்யும் பெயர்களை பிளாஸ் டிரைவில் வைத்து அனுப்ப உள்ளது. இலவச பதிவான இவற்றில் 10 லட்சம் பேர் தங்கள் பெயர்களை இணைத்துள்ளார்கள். நீங்களும் உங்கள் பெயரை பதிவு செய்யலாம்.
அதற்கு https://www.nasa.gov/send-your-name-with-artemis/ என்ற இணையத்தள பக்கத்திற்குச் சென்று போர்டிங் பாசில் பெயர் மற்றும் பின் கோடை பதிவிட வேண்டும். பிறகு உங்கள் பெயரும் இணைக்கப்பட்டு விடும். நம்மால் விண்ணுக்கு செல்ல இயலாது என்று என்னும் பலரின் எண்ணத்திற்கு மாற்றாக நம்முடைய பெயரும் விண்ணிற்கு செல்ல உள்ளது.