மகர ராசி அன்பர்களே…!! இன்று உங்கள் ராசிக்கு சந்திர பகவான் எட்டாம் இடத்தில் சஞ்சரிப்பதால் குடும்ப உறுப்பினர்களிடம் விவாகத்தை தவிர்க்கவும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்துப் போகவேண்டும். இன்று அரசு தொடர்பான செயல்களில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
கணவன் மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு அதிகமாக இருக்கும். இன்று அலுவலகத்தில் பணி சுமை குறைவதால் உற்சாகம் ஏற்படும். நிர்வாகத்தினரிடம் வைத்த கோரிக்கை நிறைவேறும். வியாபாரத்தில் அதிக லாபமும் எதிர்பாராத பண வரவும் இருக்கும்.
இன்று முக்கியமான காரியங்களுக்கு வெளியே செல்லும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6
அதிஷ்ட நிறம் : இளம்சிவப்பு மற்றும் நீல நிறம்