ரயிலில் அடிபட்டு வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் பகுதியில் உடையார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற கண்ணன் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் கண்ணனின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்த போது பாளையங்கோட்டையில் ரயிலில் அடிபட்டு கண்ணன் படுகாயத்துடன் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கண்ணன் பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.