தூய்மை பணியாளர் திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளத்தில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் மருதம்புத்தூர் ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு காளிமுத்து மோட்டார் சைக்கிளில் இருந்து எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து காயமடைந்தார். இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற பிறகு காளிமுத்து வீடு திரும்பினார்.
நேற்று காலை வீட்டில் இருந்தபோது திடீரென காளிமுத்து மயங்கி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காளிமுத்து ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.