வனத்துறையினர் 3 பாம்புகளை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள பொட்டல்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளி சத்துணவு கூடத்திற்குள் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சத்துணவு கூடத்தில் பதுங்கியிருந்த மூன்று அடி நீளமுள்ள நல்ல பாம்பை பத்திரமாக பிடித்துவிட்டனர்.
இதேபோல் புதுக்குடியிருப்பு கிராமத்தில் வசிக்கும் குருசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கிடந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பையும், சங்கர் வர்மா என்பவரது வீட்டில் பதுங்கியிருந்த 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பையும் வனத்துறையினர் லாவகமாக பிடித்தனர். இதனை அடுத்து மூன்று பாம்புகளும் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது.