வலிப்பு நோய் காரணமாக 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நங்காத்தூர் கிராமத்தில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நடத்துனராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மீரா என்ற மனைவியும் அக்ஷயராஜ் [2] என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மீரா குழந்தையுடன் தன்னுடைய தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இவருடைய குழந்தைக்கு பிறந்தது முதல் வலிப்பு நோய் இருந்துள்ளது. இந்நிலையில் திடீரென குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு வலிப்பு நோய் வந்துள்ளது.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த மீரா தன்னுடைய மகனை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதை தெரிந்துகொண்ட சிவகுமார் தன்னுடைய மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து சிவகுமார் விழுப்புரம் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.