Categories
தேசிய செய்திகள்

வரும் 17 ஆம் தேதி முதல் 4 நாட்கள் வங்கிகள் இயங்காது…. வெளியான விடுமுறை பட்டியல்…..!!!!!

இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு வருடமும் தொடக்கத்தில் பொது மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கான விடுமுறைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகளும் இந்த அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களில் அடைக்கப்பட்டிருக்கும். இதனிடையில் அனைத்து பொது மற்றும் தனியார்துறை கடன் வழங்குபவர்களும் குடியரசு தினம் (ஜனவரி 26), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), மற்றும் காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2), கிறிஸ்துமஸ் தினம் (டிசம்பர் 25) போன்ற நாட்களில் மூடப்பட்டிருக்கும்.

அது தவிர்த்து பொதுவாக தீபாவளி, கிறிஸ்துமஸ், ஈத், குருநானக் ஜெயந்தி, புனித வெள்ளி ஆகிய பண்டிகைகளில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இந்த வங்கி விடுமுறை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளிலும், மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகளும் மூடப்பட்டிருக்கும். இந்நிலையில் மார்ச் 3-ஆம் வாரத்தில் வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக வங்கிக்கு செல்ல திட்டமிட்டுள்ள பொதுமக்கள் இந்த விடுமுறை நாட்களை அறிந்து தங்கள் பணிகளை திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விடுமுறை நாட்கள்

மார்ச் 17 (வியாழக்கிழமை) – ஹோலிகா தகனைக் கொண்டாட டெஹ்ராடூன், கான்பூர், லக்னோ, ராஞ்சியில் வங்கிகள் மூடப்படும்.

மார்ச் 18 (வெள்ளி) – ஹோலி காரணமாக அகமதாபாத், ஐஸ்வால், பேலாப்பூர், போபால், சண்டிகர், டேராடூன், காங்டாக், குவஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, பனாஜி, பாட்னா, ராய்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர் போன்ற இடங்களில் வங்கிகள் மூடப்படும்.

மார்ச்-19 (சனிக்கிழமை)- ஹோலி மற்றும் யோசாங் காரணமாக இம்பால், புவனேஸ்வர், பாட்னாவில் வங்கிகளானது மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 20 (ஞாயிறுக்கிழமை) – வங்கி விடுமுறை

Categories

Tech |