சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி கிராமத்தில் 9-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 9-ஆம் தேதி அந்த சிறுவன் சிறுமியை கடத்தி சென்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமி, சிறுவன் மற்றும் அவரது தந்தை ஆகிய 3 பேரும் கோவையில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் சிறுமி உள்ளிட்ட 3 பேரையும் கண்டுபிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் சிறுவன் மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரும் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சிறுவன் மற்றும் சிறுவனின் தந்தை ஆகிய 2 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.