கும்பராசி அன்பர்களே..!! இன்று உங்கள் ராசிக்கு சந்திர பகவான் ஏழாம் இடத்தில் சஞ்சரிப்பதால் இன்று எதிர்பாராத பணவரவு உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இன்று புதிய முயற்சிகள் சாதகமாக முடியும் உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சகோதர வகையில் சுப செலவுகள் ஏற்படும்.சிலருக்கு ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்புகள் அதிகம். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
இன்று மனைவியின் உறவுகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய வீடு வாங்கு வதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். கல்வி சம்பந்தப்பட்ட பணிகளில் முன்னேற்றம் கூடும். வேலை செய்யும் இடத்தில் மேன்மையான சூல்நிலை அமையும்.இன்று அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட மறைமுக இடையூறுகள் நீங்கி நிம்மதி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். இன்று பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.
இன்று முக்கியமான காரியங்களை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 7
அதிஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்