Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ரொம்ப நேரமாவே இங்க தான் இருக்கு…. 6 இருசக்கர வாகனங்கள் மீட்பு…. போலீசார் வெளியிட்ட தகவல்….!!

கேட்பாரற்று சாலையில் நின்று கொண்டிருந்த 6 இருசக்கர வாகனங்களை போலீசார் மீட்டு காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி இன்ஸ்பெக்டர்கள் முத்துமாணிக்கம் மற்றும் தேவேந்திரன் தலைமையில் காவல்துறையினர் பாம்பூர், பெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதிகளின் வெவ்வேறு இடங்களில் சுமார் 6 இருசக்கர வாகனங்கள் வெகுநேரமாக கேட்பாரற்று நின்று கொண்டிருந்தது.

இதனை பார்த்த காவல்துறையினர் அந்த 6 இருசக்கர வாகனங்களையும் மீட்டு பரமக்குடி தாலுகா காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இருசக்கர வாகனங்களின் உரிமையாளர்கள் குறித்த விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே இருசக்கர வாகனங்களின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் காவல் நிலையத்திற்கு வந்து இருசக்கர வாகனத்தை வாங்கி செல்லுமாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |