Categories
தேனி மாவட்ட செய்திகள்

இங்க குப்பையை கொட்ட கூடாது…. வீடு கட்டி தாங்க…. பழங்குடியினர் தாசில்தாரிடம் கோரிக்கை….!!

பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி பழங்குடியின மக்கள் தாசில்தாரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர்.

தேனி மாவட்டம் போடி அடுத்து சிறைக்காடு என்ற மலைக்கிராமம் ஒன்று உள்ளது. அப்பகுதியில் பழங்குடியின மக்கள் காலம் காலமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வீடு கட்டுவதற்காக 72 சென்ட் நிலத்தை ஒதுக்கியது. ஆனால் தற்போது வரையிலும் அப்பகுதியில் வீடுகள் கட்டித் தரப்படவில்லை. இதற்கிடையே போடி நகராட்சியில் இருந்து குப்பை மற்றும் கழிவுகள் அனைத்தும் இந்த கிராமத்திலேயே கொட்டப்பட்டு வருகிறது.

இதனால் அப்பகுதி குப்பை மேடாக காட்சியளிப்பதோடு மட்டுமல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை சுவாச கோளாறு போன்ற நோய்களும் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து அணைக்கரைப்பட்டி ஊராட்சி தலைவர் லோகநாதன் தலைமையில் சிறைக்காடு கிராமத்தை சேர்ந்த பழங்குடியினர் போடி தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில் நகராட்சி சார்பில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்றும், அரசு எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் புதிதாக வீடுகள் கட்டித்தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து தாசில்தார் செந்தில்முருகன் மனுவை உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

Categories

Tech |