Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அனைத்து ரயில் நிலையங்களிலும்… ரயில்வே வாரியம் அதிரடி அறிவிப்பு….!!!

ஐ.ஆர்.சி.டி.சி எனப்படும் நிறுவனத்திடமிருந்து உணவு விடுதியை நடத்தும் உரிமையை ரயில்வே வாரியமே எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில், இனிவரும் காலங்களில் ரயில்வே வாரியமே உணவு விடுதிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து ரயில்வே வாரிய அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாவது, ரயில் போக்குவரத்தில் கட்டண வருவாயை தாண்டி மற்ற வழிகளிலும் வருமானத்தை ஈட்டும் வகையில், ஐ.ஆர்.சி.டி.சி என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டு ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் உணவு விடுதிகளை நடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டு இருந்தது.

ஆனால் சமீப காலமாக ஏராளமான ரயில் நிலையங்களில் உணவு விடுதிகளானது செயல்படவில்லை. இதையடுத்து அதிக உரிமக் கட்டணம் நிர்ணயித்ததால் யாரும் உரிமம் கோரவில்லை என்றும், இதேபோல் ரயில்வேக்கு சொந்தமான இடங்களும் பயன்படாமல் கிடந்த நிலையில் ரயில்வேயின் வருமானமும் பெருமளவில் குறைந்துவிட்டது. இதை அடுத்து இந்த உணவு விடுதி நடத்தும் பொறுப்பை ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனத்திடமிருந்து ரயில்வே பறித்துள்ளது.

இந்நிலையில் 100 உணவு விடுதிகளை ரயில்வே வாரியமே திறக்க முடிவு செய்துள்ளது. மேலும் இது தொடர்பாக நாடு முழுவதும் 17 மண்டல அதிகாரிகளுக்கு கடந்த 8 ஆம் தேதி உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளது. அதன்படி அதிகாரிகள் தங்களது நிர்வாகத்தில் உள்ள ரயில் நிலையங்களில், ஓராண்டுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள உணவு விடுதிகளை ஆய்வு செய்து, அதனை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார்.

Categories

Tech |