கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றத்தில் இருக்கும் தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லூரியில் பிரிதிவிராஜன் என்பவர் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்த பிரிதிவிராஜன் விடுதியில் வைத்து விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதனை பார்த்த சக மாணவர்கள் உடனடியாக பிரித்திவிராஜனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பிரித்திவிராஜன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.