நண்பரை கத்தியால் குத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராமநாதபுரம் பாரதி நகர் முதல் வீதியில் தொழிலாளியான சசிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்துல் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் அப்துல் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது சசிகுமார் அவர்களிடம் பேசியுள்ளார். இதனை பார்த்த அப்துல் எனது குடும்பத்தினரிடம் நீ ஏன் பேசிக் கொண்டிருக்கிறாய் இங்கிருந்து செல் என கூறியுள்ளார். இதனைக் கேட்ட சசிகுமார் கோபத்தில் அங்கிருந்து சென்று விட்டார்.
சிறிது நேரம் கழித்து அப்துல் தனது நண்பரான மிஷால் என்பவரை அழைத்துக்கொண்டு சசிகுமாரின் வீட்டிற்கு சென்று அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் அப்துல் சசிகுமாரை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனையடுத்து படுகாயமடைந்த சசிகுமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்துலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.