சம்பளம் வாங்கும் நபர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் சேமிக்கும் பணம் அவர்களின் வாழ்நாளில் மிகப் பெரிய வருமானம் ஆகும். எனவே பிஎஃப் தொடர்பான விதிமுறைகளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். நீங்கள் பணியில் இருக்கும் வரை பிஎஃப் கணக்கில் பங்களிப்பு செய்தீர்கள். ஓய்வு பெறும் போது உங்களிடம் கணிசமான தொகை கையில் கிடைக்கும். இதன் மூலம் உங்களுடைய கடைசி காலத்தை அச்சமில்லாமல் மகிழ்ச்சியாய் வாழலாம்.
ஆனால் பல சமயங்களில் பிஎஃப் தொடர்பான விதிமுறைகள் பற்றி தெரியாமலோ அல்லது சில தவறுகள் காரணமாக பிஎஃப் கணக்கு மூடப்பட்டு விடுகிறது. எனவே நீங்கள் இது போன்ற சர்ச்சைகளில் சிக்காமல் இருக்க முன்கூட்டியே பிஎஃப் தொடர்பான சில முக்கியமான விதிகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் இதற்கு முன் பணிபுரிந்த நிறுவனத்தில் இருந்து புதிய நிறுவனத்திற்கு உங்களுடைய pf கணக்கை மாற்ற வில்லை என வைத்துக் கொள்வோம். அப்போது உங்களுடைய பிஎஃப் கணக்கில் 36 மாதங்களுக்கு எந்த பரிவர்த்தனையும் இல்லை என்றால் pf கணக்கு முடக்கப்பட்டு வருகிறது.
எனவே புதிய நிறுவனத்திற்கு உங்களுடைய பிஎஃப் கணக்கை மாற்றிவிட வேண்டும். பிஎஃப் கணக்கு ஆக்டிவேட் ஆனவுடன் நீங்கள் பண பரிவர்த்தனையை செய்யமுடியாது. கணக்கை செயல்பட வைக்க பிஎஃப் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். கணக்கு செயல்படாமல் இருந்தாலும் கணக்கில் கிடைக்கும் பணத்திற்கு வட்டி தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். எனவே கவலைப்பட தேவை இல்லை. இதற்கு முன்னால் விதிமுறைப்படி கணக்கில் இருக்கும் பணத்திற்கு வட்டி கிடைக்காது. ஆனால் 2016-ம் ஆண்டு முதல் இந்த விதிமுறை திருத்தப்பட்டது. பிஎஃப் அமைப்பு சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் செயலற்ற கணக்குகள் தொடர்பான உரிமை கோரல்கள் தீர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.
மோசடி தொடர்பான ஆபத்தில் குறைக்கப்படுவதையும் உரிமை கோருபவர்களுக்கு கிளைம் தொகை செலுத்தப்படுவதையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என கூறப்பட்டுள்ளது. செயல்படாத பிஎஃப் கணக்குகள் தொடர்பான கோரிக்கை தீர்க்க அந்த கோரிக்கையை பணியாளரின் முதலாளி சான்றளிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். ஒருவேளை நிறுவனம் மூடப்பட்டு உரிமை கோரலை சான்றளிக்க யாரும் இல்லை என்றால் kyc ஆவணங்களின் அடிப்படையில் வங்கி தரப்பில் சான்றளிக்கப்படும். ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் போன்றவை அடங்கும் kyc சரிபார்ப்புக்கு தேவைப்படும். அரசுத் தரப்பில் வழங்கப்படும் வேறு எந்த அடையாளத்தையும் இதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.