விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான ஏ.ஏ சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை “தளபதி” என்று அழைக்கிறார்கள்.
இந்நிலையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று தளபதி மக்கள் இயக்கத்தின் சமூக நலப்பணி நாள் என்று அறிவிக்கப் பட்டு ஒவ்வொரு திட்டம் நடைமுறைப் படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் நேற்று பிளாஸ்டிக் ஒழிப்பு பிரச்சாரம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விஜய் ரசிகர்கள் துணிப்பை வழங்கினர். ஊராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றியை தொடர்ந்து அரசியலில் ஈடுபட ஏதுவாக மக்கள் பணிகளை மேற்கொள்ள விஜய் கட்டளையிட்டுள்ளார்.