இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பண பரிவர்த்தனை நிறுவனமான பேடிஎம் நிறுவனத்தின் சிஇஓ விஜய் சேகர் சர்மா கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி விஜய் சேகர் சர்மா தெற்கு டெல்லியில் உள்ள ஒரு பகுதியில் தன்னுடைய சொகுசு காரை நின்று கொண்டிருந்த காவல்துறை வாகனத்தின் மீது மோதச் செய்து சேதம் ஏற்படுத்தியுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பியுள்ளார். இது குறித்து தொடர்ந்து விசாரணை செய்த போலீசார் அந்த காரை ஓட்டிச் சென்றது பேடிஎம் நிறுவன சிஇஓ விஜய் சேகர் சர்மா என்று கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவர் மீது ஐபிசி பிரிவு 279 கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Categories