பராக் உசைன் ஒபாமா, அமெரிக்க அரசியல்வாதியும், ஐக்கிய அமெரிக்காவின் 44வது அரசுத்தலைவரும் ஆவார். 2008 அரசுத்தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நவம்பர் 6, 2012 அன்று நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக நின்ற மிட் ராம்னியை தோற்கடித்து மீண்டும் அதிபர் ஆனார். இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் முன்னாள் அதிபரான இவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும் இதுகுறித்து டுவிட்டரில் பதிவு செய்துள்ளதாவது, தனக்கு இரண்டு நாட்களாக தொடர்ந்து தொண்டை வலி இருந்தது என்றும் மேலும் அவரது மனைவி மிஷெலுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு ‘நெகட்டிவ்’ ஆக வந்துள்ளது எனவும் ஒபாமாவும் அவருடைய மனைவியும் 3 தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளதாக கூறியுள்ளார். இதையடுத்து பிறரையும் தடுப்பூசி செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.