Categories
தேசிய செய்திகள்

மக்களே 2 நாட்கள் வங்கி இயங்காது…. வெளியான திடீர் அறிவிப்பு…!!!!

மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் கொள்கையை எதிர்த்து  பிப்ரவரி 23, 24 இரண்டு நாட்களுக்கு நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என பல்வேறு ஊழியர் சங்கங்கள் அறிவித்திருந்தனர். இந்நிலையில் கொரோனா  மூன்றாம் அலை மற்றும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் காரணமாக வேலை நிறுத்த போராட்டம் ரத்து செய்யப்படுவதாக வங்கி ஊழியர்கள் அறிவித்திருந்தனர்.

இதற்கு பதிலாக மார்ச் 28 ,29 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வங்கி ஊழியர் சங்கங்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மத்திய வர்த்தக சங்கங்களின் துறைசார் கூட்டமைப்புகள் நடத்திய ஆன்லைன் கூட்டத்தில் மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |