கேரளா மாநிலம் பாலக்காடு அருகே உள்ள எலப்புள்ளி கிராமத்தில் 1928ம் ஆண்டு பிறந்தவர், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். இவர் மனயங்கத்து சுப்பிரமணியன் விசுவநாதன் அல்லது எம். எஸ். விஸ்வநாதன், அல்லது பொதுவாக எம்எஸ்வி, தமிழ்த் திரைப்படவுலகில் புகழ்பெற்று விளங்கிய இசையமைப்பாளர் ஆவார். இவர் மலையாளக் குடும்பத்தில் பிறந்தார்.
மெல்லிசை மன்னர் உட்பட பல பட்டங்களையும் மற்றும் ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளையும் பெற்றவர். மேலும் 2015ஆம் ஆண்டு எம்எஸ்சி அவர்கள் காலம் எய்தினார். இந்நிலையில் மறைந்த எம்.எஸ்.விஸ்வநாதனை கௌரவப்படுத்தும் வகையில் நினைவிடம் அமைப்பதற்காக ஒரு கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கேரள பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.