ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி பகுதியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது அரசு ஊழியர் சங்க தலைவர் தனுஷ்கோடி தலைமை நடைபெற்றுள்ளது. இதில் செயலாளர் சுப்பிரமணியன் , மாவட்ட துணை தலைவர் முத்துமாடன், மாவட்ட பிரதிநிதி சுப்பையா, சங்க தலைவர் தனுஷ்கோடி, செயலாளர் சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஓய்வூதியர்களின் பிரச்சனைகளை கண்டித்து வருகின்ற 15-ஆம் தேதி நடைபெற உள்ள போராட்டத்தில் கலந்துகொள்வது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.