பேரூராட்சி அலுவலகம் முன்பு நேற்று முதியவர் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பேரூராட்சி அலுவலகம் முன்பு 60 வயது மதிப்பிலான முதியவர் ஒருவர் நேற்று மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ளார். இதுகுறித்து வடமதுரை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் அப்பகுதியில் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் அந்த விசாரணையில் அலுவலகம் முன்பு இறந்தவர் அண்ணாநகரைச் சேர்ந்த 60 வயதான சின்ன வீரன் என்பது தெரியவந்துள்ளது .
அவர் பேரூராட்சி அலுவலகம் முன்பு உட்கார்ந்திருந்தபோது நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்தது விசாரணையில் தெரியவந்துளது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.