உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து 18-வது நாளாக நீடித்து வரும் நிலையில் இதனை தடுக்க அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல் ஐ.நா. அமைப்பும் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கிடையில் போர் காரணமாக இருநாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என்று பலர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் ரஷ்ய படைகள் முக்கியமான நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அதே சமயம் ரஷ்யாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் லிவிவ் நகரிலுள்ள ராணுவதளத்தின் மீது ரஷ்ய படைகள் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தி உள்ளனர். இதன் காரணமாக 35 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் 60 பேர் இந்த தாக்குதலில் படுகாயமடைந்து உள்ளதாக லிவிவ் நகரில் உள்ள மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார்.