Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே…. இப்படி ஒரு திட்டமா..? அரசு பள்ளி ஆசிரியர்கள் ஷாக்…!!!

அரசுப்பணி வாங்கி தருவதாக கூறி மயிலாடுதுறை தம்பதியரிடம் 8, 50,000 ரூபாய் மோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மேல் ஒத்த சரக தெருவைச் சேர்ந்த தம்பதியர் விஜயகுமார், வெற்றிச்செல்வி. இவர்களின் வீட்டின் மாடியில் திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் தன் ஜீவன் வங்கியில் வேலை செய்து வருவதாகவும், பணி மாறுதலுக்காக மயிலாடுதுறைக்கு வந்துள்ளதாகவும் கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி குடியேறி இருக்கிறார். அதன் பின்  செல்வியிடம் பேசிய முருகன் அவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியிருக்கிறார்.

மேலும் தனக்கு பல அமைச்சர்களை தெரியும் எனவும் தனது மனைவிக்கு அமைச்சர் மூலமாகத்தான் ஆசிரியர்களை பெற்றதாகவும் கூறியுள்ள இதனைக் கேட்ட வெற்றிச்செல்வி தனது கணவரிடம் முருகன் கூறியதை அப்படியே எடுத்துக் கூறியுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெற்றிச்செல்வி தனது கணவனின் எதிர்ப்பை மீறி முருகனுக்கும் வாட்ஸ் அப்பில் தனது கல்வி சான்றிதழ் மற்றும் நகல்களை அனுப்பியுள்ளார். இதன் காரணமாக வெற்றி செல்விக்கும்  அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது . ஒரு கட்டத்தில் அவர் கணவரும் இந்த ஆசிரியர் பணிக்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் முருகன்தான் அமைச்சரிடம் பேசி விட்டதாகவும் 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் வாங்கி விடலாம் எனவும் ஆசை கட்டியுள்ளார். இதனை நம்பி வெற்றிசெல்வி தனது நகைகளை விற்று கடன் வாங்கி 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை தயார் செய்துள்ளார். திருச்சியில் உள்ள பள்ளி கல்வித்துறை அமைச்சரின் உதவியாளர் கொடுத்துவிட்டு பணி நியமனக் கடிதத்தை வாங்கி வரலாம் என கூறி கணவர் விஜயகுமாரை காரில் அழைத்து சென்றுள்ளார். முருகன் ஒரு நபரை மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படும் என தொலைபேசி எடுத்து செல்வதற்கு அனுமதி இல்லை எனவும் கூறி பணத்தினை  எடுத்து சென்றுள்ளார் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பாததால் காரிலேயே இருந்த விஜயகுமார் மற்றும் அவரது ஓட்டுநர்கள் அதிர்ச்சி அடைந்து மயிலாடுதுறைக்கு திரும்பியுள்ளனர்.

இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் எஸ்.ஐ  இளையராஜா தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து முருகனை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். தொடர்ந்து மோசடி சம்பவங்களில் ஈடுபட்ட முருகன் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.  மேலும் இதுபோல் முருகன் பல நபர்களை ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விஜயகுமார் மற்றும்  செல்வி  தம்பதியினரிடம்  ஏமாற்றிய  பணத்தினை காவல்துறையினர் மீட்டு  ஒப்படைத்தனர்.

Categories

Tech |