புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் குறைப்பிரசவத்தில் பிறந்த பச்சிளம் குழந்தை தடுப்பூசி போட்டு இறந்தால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டம் புது வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் பாலசந்தர். இவர் மெட்ரோ ரயில் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பிரியா. இந்த தம்பதியருக்கு ரித்திஷ்(3) என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த பிரியா கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி பிரியாவுக்கு 8 மாதத்தில் குறைபிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தை எடை குறைவாக பிறந்ததால் ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் இன்குபேட்டரில் வைத்து குழந்தை பராமரிப்பட்டு வந்த நிலையில், 15 நாட்கள் கழித்து குழந்தையை வீட்டுக்கு கொண்டு வந்தனர்.நேற்று முன்தினம் குழந்தைக்கு மருத்துவமனையில் 45 நாள் தடுப்பூசி போடபட்டது. வீட்டுக்கு வந்து பால் குடித்து விட்டு தூங்கிய குழந்தை மயக்க நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து குழந்தையின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் புதிய வண்ணார்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிந்து எடை குறைவாக பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போட்டால் தான் இறந்ததா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.