சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதன் முறையாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதையடுத்து அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் கொரோனா தொற்றை குறைக்க போராடி வந்தது. இந்தநிலையில் சீனா கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வந்தது. அதன்பின் சீனாவில் மறுபடியும் கொரோனா வைரஸ் தலைக்காட்டத் தொடங்கியது. தற்போது அங்கு கடந்த சில தினங்களாக ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
அதன்படி இன்றைய நிலவர அடிப்படையில் இதுவரையும் இல்லாத அளவுக்கு சுமார் 3,400-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக சீன நாட்டின் பல மாகாணங்களில் முழுஊரடங்கு நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது. இதனால் அங்கு உள்ள 1.3 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளில் முடங்கினர். அத்துடன் சாங்ச்சுன், ஜிலியன் உள்ளிட்ட மாகாணங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தொற்றை கட்டுக்குள் கொண்டுவரவில்லைஎன சிங்குகுன், ஜிலின் போன்ற இருநகரங்களின் மேயர்களை அந்நாட்டு அரசு பதவிநீக்கம் செய்துள்ளது. இந்நிலையில் சீன நாடு வேறு ஒரு புது வைரஸ் தொற்று பரவி உள்ளதை மறைக்கிறதா?.. என்று உலகநாடுகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் உலகளவில் பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ் தங்கள் நாட்டில் தற்போது வேகமெடுத்துள்ளது எனவும் குளிர்காலம் என்பதால் தொற்றின் பரவல் தீவிரமடைந்து வருகிறது எனவும் சீனா தெரிவித்துள்ளது. இத்தகவலை உலக நாடுகள் நம்ப தயங்குகின்றன.