உக்ரைன் நாட்டில் ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல்களில் தற்போது வரை 7 மருத்துவமனைகள் முழுவதுமாக அழிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 19ஆம் நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதில் உக்ரைன் படைகளும் பதில் தாக்குதல் நடத்துவதால் இரு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. இதனால் உக்ரைன் நாட்டை சேர்ந்த மக்கள் தங்களை காத்துக்கொள்ள அந்நாட்டிலிருந்து அதிக அளவில் வெளியேறி வருகிறார்கள்.
இந்நிலையில் உக்ரைன் நாட்டில் ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல்களில் தற்போதுவரை 7 மருத்துவமனைகள் முழுவதுமாக அழிக்கப்பட்டிருக்கிறது என்று உக்ரைன் சுகாதாரத்துறை அமைச்சரான விக்டர் லியாஸ்கோ கூறியிருக்கிறார்.
மேலும், அவர் கூறியதாவது, 104 மருத்துவமனைகள் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. மருத்துவமனைகள் மீதான இந்தத் தாக்குதல்களில் தற்போது வரை மருத்துவ பணியாளர்கள் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 நபர்களுக்கு படுகாயம் ஏற்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.