தனியார் எஸ்டேட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 1 ஏக்கர் பரப்பளவிலான செடி, கொடிகள் எரிந்து நாசமானது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் வால்பாறையில் உள்ள தனியார் எஸ்டேட் பகுதியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு மரம், செடி, கொடி முழுவதும் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு காட்டு தீயை அணைத்தனர்.
இதற்கிடையில் அருகில் இருந்த தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புக்குள் காட்டு தீ பரவாமல் தீயணைப்புதுறையினர் விரைந்து செயல்பட்டனர். இந்த தீ விபத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவிலான செடி, கொடிகள் எரிந்து நாசமானது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.