போதையில் மகன் தந்தை மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள உக்கரம் பகுதியில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கமலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கணேசன், திருமுருகன் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் திருமுருகன் மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான திருமுருகன் கிருஷ்ணசாமியிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். நேற்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த திருமுருகன் தனது தந்தையுடன் தகராறு செய்துள்ளார்.
மேலும் கோபத்தில் கிருஷ்ணசாமியின் மீது மண்ணெண்ணையை ஊற்றி திருமுருகன் தீ வைத்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று கிருஷ்ணசாமியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருமுருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.