Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மொத்தம் 10 டன் லோடு…. பாரம் தாங்காமல் கிணற்றில் மூழ்கிய லாரி…. வைரலாகும் வீடியோ…!!

பாரம் தாங்காமல் லாரி கிணற்றுக்குள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கிய வீடியோ சமூக வளைதளத்தில் வேகமாக வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சேவாகவுண்டனூர் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் வெங்கடேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து 3 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் அறுவடை செய்யப்பட்ட 10 டன் கரும்புகளை லாரியில் ஏற்றிக்கொண்டு விற்பனைக்காக பள்ளிபாளையம் அருகில் இருக்கும் தனியார் சர்க்கரை ஆலைக்கு புறப்பட்டனர். இந்த லாரியை பரமேஸ்வரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பாரம் தாங்காமல் தோட்டத்தில் இருந்த 60 அடி ஆழ கிணற்றில் லாரி சாய்ந்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரில் மூழ்க தொடங்கியது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் லாரியிலிருந்து கிணற்றுக்கு வெளியே குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். சிறிது நேரத்தில் லாரி முழுவதும் தண்ணீரில் மூழ்கிவிட்டது. இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் லாரி கிணற்றுக்குள் மூழ்குவதை சில தொழிலாளர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |