உத்தரபிரதேம் மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியிலுள்ள சந்தைகளில் ஹோலி பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் உருவ முகமூடி விற்பனையானது களைகட்டி வருகிறது. அண்மையில் நடைபெற்று முடிந்த உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களின் பொதுத்தேர்தலில் பா.ஜ.க. கட்சி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மோடியின் உருவமுகமூடிக்கான தேவை மற்றும் விற்பனையை அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் யாரும் ஹோலி பண்டிகையை கொண்டாட உற்சாகம் காட்டவில்லை. ஆனால் அண்மையில் நடந்து முடிந்துள்ள பொதுதேர்தலின் முடிவுகளுக்கு பின் மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக சென்ற 2 வருடங்களை விடவும் நடப்பாண்டு இந்த உருவமுகமூடியின் தேவை மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது.