பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் திருக்கோவிலில் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் அக்னி வசந்த விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு அரவான் மோகினி திருமணம்நடைபெற்றது. அதன்பிறகு கிருஷ்ணன் தூது நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனையடுத்து அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மேலும் துரியோதனன் படுகள நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பிறகு தீமிதி திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து அம்மனுக்கு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.