Categories
மாநில செய்திகள்

OMG: உச்சம் தொடும் மூலப்பொருட்களின் விலை…. பாலிபேக் 40% அதிகரிப்பு…. எதற்காக தெரியுமா?…..!!!!!

திருப்பூரில் 150 பாலிபேக் உற்பத்தி நிறுவனங்கள் இருக்கின்றன. அங்கு பாலிபுரொப்லின், பாலிஎத்திலீன் மூலப்பொருட்களை பயன்படுத்தி பின்னல்ஆடை ரகங்களை பேக்கிங் செய்வதற்கான பாலிபேக் தயார் செய்யப்படுகிறது. வெளிநாடு மற்றும் உள்நாட்டு சந்தைக்காக தயார் செய்யப்படும் ஆடை ரகங்கள் துணிகளை பாதுகாப்பதில் பாலிபேக் குகளின் பங்கு இன்றியமையாததாக இருக்கிறது. பெட்ரோலிய பொருளான நாப்தாவில் இருந்து பெறப்படும் பாலி புரொப்லின், பாலி எத்திலீன் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் டன்னுக்கு 21 ஆயிரம் ரூபாய் விலை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் திருப்பூர் பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்க (டிப்மா ) தலைவர் சண்முகம் கூறியிருப்பதாவது, பாலிபேக் தயாரிப்பு நிறுவனங்கள், இந்தியன் ஆயில், ரிலையன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து பாலிபுரொப்லின், பாலி எத்திலீன் மூலப்பொருட்களை கொள்முதல் செய்கின்றன. உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் காரணமாக பெட்ரோலிய பொருட்கள் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பாலிபேக் உற்பத்திக்கு தேவையான அனைத்து மூலப் பொருட்கள் விலையும் அபரிமிதமாக அதிகரித்து உள்ளது. கடந்த 10 நாட்களில் டன்னுக்கு 21 ஆயிரம் ரூபாய் விலை உயர்ந்துள்ளது. 75 நாட்களில் மட்டும் மூலப்பொருட்கள் விலை 40% உயர்ந்துள்ளது.

ஒவ்வொரு வாரமும் மூலப்பொருள் விலை உயர்வதால், பாலிபேக்கிற்கு விலை நிர்ணயிக்க முடிவதில்லை. இதற்கிடையில் புக்கிங் செய்தாலும் பாலி எத்திலீன், பாலி புரொப்லின் உட்பட மூலப்பொருட்கள் போதுமான அளவு கிடைப்பதில்லை. இவ்வாறு உற்பத்தி செலவினம் அதிகரித்து இருப்பதோடு, மூலப்பொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால் பாலிபேக் உற்பத்தி மேலும் பாதிக்கச் செய்கிறது. மூலப்பொருட்கள் விலை உயர்வுக்கு ஏற்றவாறு பாலிபேக் விலையும் 40% உயர்த்தப்படுகிறது. வருகிற நாட்களில் பாலி எத்திலீன், பாலி புரொப்லின் விலை குறையும் என்று எதிர்பார்க்கிறோம். மூலப்பொருட்கள் விலை குறைந்தால் பாலிபேக் விலையும் குறைக்கப்படும் என்று அவர் கூறினார்.

Categories

Tech |