மிக பழமையான அம்மன் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சரபோஜி நகரில் மிகப்பழமையான காமாட்சி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள லட்சுமி குபேரர் சன்னதி, தன்வந்திரி பகவான் சன்னதி, சமயக்குரவர் நால்வர் சன்னதி ஆகிய சன்னதிகளில் பல ஆண்டுகளுக்குப்பின் ராஜகோபுரம் எழுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றும் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இதில் நேற்று காலை சுவாமிகளுக்கு , கடம் புறப்பாடு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன்பின்னர் கோபுரங்களுக்கு நிர்மாணிக்கப்பட்ட காமாட்சி அம்மன், விநாயகர், பாலசுப்ரமணியர் , ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர், விஷ்ணு துர்க்கை, ஐயப்பன், வைரவர் உள்ளிட்ட அனைத்து மூலவர்களுக்கும் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஏராளமான பக்தர்கள் சுவாமிகளை தரிசனம் செய்துள்ளனர்.