மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஆலாம்பாளையம் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினர் தாதகாப்பட்டி உழவர் சந்தையில் பூக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று கணவன் மனைவி இருவரும் அதிகாலை 5 மணியளவில் பூக்களை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் உழவர் சந்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த டேங்கர் லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து காயமடைந்த கிருஷ்ணமூர்த்தியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற லட்சுமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஷான்கான் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.