சுவர் இடிந்து விழுந்ததால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள காடையாம்பட்டி புது வீதி பகுதியில் தொழிலாளியான பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் பாலசுப்பிரமணியம் மகுடஞ்சாவடி யூனியன் அலுவலகம் அருகில் இருக்கும் தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த போது தண்ணீர் தொட்டியின் சுவர் இடிந்து விழுந்தது. இதனால் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த பாலசுப்பிரமணியம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதனையடுத்து தோட்டத்திற்கு சென்ற உரிமையாளர் பாலசுப்பிரமணியம் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலசுப்பிரமணியத்தின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.