Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மரத்தில் மோதிய லாரி…. உயிர் தப்பிய ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!!

எதிர்பாராதவிதமாக மரத்தில் மோதி லாரி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் கிழக்கு கடற்கரை சாலையில்  இருந்து சென்னைக்கு லாரி ஒன்று சென்றுள்ளது. இந்த லாரி ராஜாம்பாளையம் அருகே வந்தபோது திடீரென நிலைத்தடுமாறி ஒரு மரத்தில் மோதியது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

ஆனால் லாரியின் முன்பக்க பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது. மேலும் லாரி மோதியதில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சாலையில் இருந்த லாரி மற்றும் மரக்கிளைகளை  அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

Categories

Tech |