Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா செல்வ வரி வழக்கு… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

ஜெயலலிதா செல்வ வரி வழக்கு குறித்த முக்கிய உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

செல்வ வரி வழக்கிலிருந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை விடுவித்ததை  எதிர்த்து வருமான வரி துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2008 – 2009 ஆம் ஆண்டுக்கான செல்வ வரி கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என்று வருமான வரித்துறையினர் அவர் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை விசாரித்த வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அவரை விடுவிக்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவுகளை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்தியநாராயணன் பிரசாந்த் அமர்வில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா  காலமாகி விட்டதால் அவரது வாரிசுகளான தீபா,தீபக்கை    வழக்கில் சேர்க்க அனுமதி கோரி வருமான வரித் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தீபா,தீபக்கை  வழக்கில் சேர்க்க அனுமதித்த  நீதிபதிகள் விசாரணையை ஏப்ரல் முதல் வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளனர். வழக்கு தொடர்பான ஆவணங்களை தீபா  தீபக் தரப்புக்கு வழங்க வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |