Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் யூடியூப் பார்த்து பிரசவம்!!…. அன்புமணி ராமதாஸ் அறிக்கை…..!!!!!

பாமக இளைஞரணி தலைவரான டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 2017-18 ஆம் ஆண்டு மகப்பேற்றின் போது தாய்மார்கள் இறக்கும் விகிதத்தில் தமிழகம் 3ஆம் இடத்திலிருந்து 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பல வருடங்களாக கேரளா, மராட்டியத்துக்கு அடுத்தபடியாக இருந்த தமிழகம் தற்போது தெலுங்கானாவுக்கு பின் சென்றிருப்பது கவலையளிக்கிறது. சென்ற 2016-2017-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தாய்மார்கள் இறப்பு விகிதம் (1 லட்சம் மகப்பேறுகளில்) கேரளாவில் 13, மராட்டியத்தில் 8, ஆந்திரம் – தெலுங்கானம் தலா 7 குறைந்த நிலையில், தமிழகத்தில் 2 மட்டுமே குறைந்துள்ளது.

ஆந்திரத்துடன் சமநிலையில் இருக்கிற தமிழகம் விரைவில் 5-வது இடத்திற்கு தள்ளப் படலாம். தமிழ்நாட்டில் தாய்மார்கள் இறப்புவிகிதம் 58ஆக உள்ள சூழலில், அதனை 2023ம் ஆண்டில் 25 ஆக குறைக்க வேண்டும் என்பது மிகவும் சவாலானது. இதற்கிடையில் ஆரம்ப சுகாதார நிலையங்களையும், 108 அவசர ஊர்திகளையும் அதிகரிப்பது உள்ளிட்ட மருத்துவக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும். தற்போது யூடியூப் வழிகாட்டுதலின் படி மகப்பேறு பார்க்கும் அறிவீனம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. அதனை அகற்றுவதுடன் மகப்பேறு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மகளிருக்கான மகப்பேறு கால நிதியுதவியை ரூபாய் 18 ஆயிரத்தில் இருந்து ரூ.24 ஆயிரமாக உயர்த்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |