வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக வாட்ஸ்அப் மூலம் 2 பேரிடம் ரூபாய் 31/4 லட்சம் மோசடி செய்தவர்களை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், ஜீவா நகரில் வசித்து வருபவர் 24 வயதான சாகுல் ஹமீது. இவரது செல்போன் வாட்ஸ் அப்பிற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளிநாட்டில் வேலை இருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த தகவலை தொடர்ந்து அந்த லிங்கில் சென்று விவரங்களை அவர் பதிவு செய்துள்ளார். பின்னர் சாகுல் ஹமீதை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் விசா எடுப்பதற்கும் மற்றும் மருத்துவ பரிசோதனை செய்வதற்கும் ரூபாய் ஒரு லட்சத்து 30 ஆயிரம் தேவை என கூறியுள்ளார் .
இதனை நம்பிய சாகுல்ஹமீது சம்பந்தப்பட்ட மர்மநபர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்தியுள்ளார். அதன் பின்னர் அந்த மர்ம நபரை தொடர்பு கொண்டு பேச முடியாததால் அவர் ஏமாந்ததை புரிந்துகொண்டார். இதுதொடர்பாக சேலம் மாவட்டம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார் . அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தை போல் சேலம் மாவட்டம் பெரம்பலூர் நாராயண பிள்ளை தெருவில் வசித்து வரும் வயதான சந்தோஷ்குமார் என்பவர் இவரது செல்போன் எண்ணுக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆன்லைனில் முதலீடு செய்வது தொடர்பாக லிங்க் ஒன்று வந்துள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து தனது விலாசம் வங்கி கணக்கு எண் போன்ற தகவல்களை பதிவு செய்துள்ளார்.
அதன் பின்னர் அடுத்த சில நிமிடங்களில் சந்தோஷ்குமார் வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 2 லட்சத்து 60 ஆயிரத்து 500 பணம் எடுக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இந்த பண திருட்டு தொடர்பாக மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார் .
இந்தப் புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமார் வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 வாலிபர்களிடம் நூதன முறையில் ரூபாய் 3 லட்சத்து 81 ஆயிரம் மோசடி செய்த வழக்கை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.